LATEST NEWS

பள்ளி மாணவர்கள் அடையாள அட்டையில் சாதி குறிப்பிடப்பட உள்ளதா? செங்கோட்டையன் பதில்.

By ASWATHTHAMAN N • 2026-06-28 08:41 • 3 views   Share WhatsApp Share Facebook Share X
பள்ளி மாணவர்கள் அடையாள அட்டையில் சாதி குறிப்பிடப்பட உள்ளதா? செங்கோட்டையன் பதில்.
பள்ளி மாணவர்களின் புதிய கியூ ஆர் அடையாள அட்டையில் சாதி விவரங்கள் இடம்பெறாது என வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். கியூஆர் தரவுகளில் மாணவர்களின், ரத்த வகை, ஆதார் உள்ளிட்ட அத்தியாவசிய தகவல்கள் மட்டுமே இடம்பெறும் என்றும், இதுகுறித்து பரவி வரும் தகவல்கள் தவறானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். பரிசீலித்து வருகிறோம் இதற்கு முன்னால் வருவாய்த்துறை விஏஓ அலுவலகம் ஆர்.ஐ. தாசில்தாரை சென்றுதான் இந்த சான்றிதழை பெற முடியும். இப்பொது பள்ளியிலேயே பெற முடியும். கியூஆர் கோடு மூலம் வழங்கலாமா என்று பரிசீலித்து வருகிறோம். இரண்டு துறையும் இணைந்து பேசிய பிறகு அந்த முடிவுகளை மேற்கொள்ள இருக்கிறோம். சாதி சான்றிதழை பொறுத்தவரை கல்வி கூடத்தில் ஆசிரியர் கேட்கின்றதற்கு மட்டும், 10 மற்றும் 12 வகுப்புகளுக்கு சான்றிதழ் வழங்குவதற்கு.. துறையின் சார்பாக தொடர்ந்து 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அது தொடர்ந்து நடைபெறும். அதே நேரத்தில் நாம் வழங்கப்படுகிற டேட்டாவில் சாதி அடிப்படையில் இருக்காது. ஏன் என்றால் பள்ளியில் கொடுத்துவிட்ட பிறகு அதில் இடம் பெறக்கூடாது என்பதுதான் அரசின் நோக்கம். சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு இருக்க கூடிய இயக்கம். மானவர் நலன் கருதி அவர்கள் வாழ்க்கையில் செய்திகளை தெரிந்து கொள்தவற்கு, விபத்துகள் வரும் போது முகவரி, ஆதார் இருந்தால் உடனடியாக நிவாரணப்பணி பெற முடியும். வெளியூறுக்கு சென்று திரும்பும் போது, மற்றவர்களுக்கு உடனடியாக தொடர்பு கொள்வதற்கும் அது ஏதுவாக அமையும். ஆய்வு செய்ய இருக்கிறோம் இதை மட்டும்தான் செய்ய போகிறோம். சாதி சான்றிதழை இணைக்க போவதாக செய்தி போடுகிறார்கள். அது போல எப்போதும் இணைக்க்கப்போவது இல்லை. மாணவர்கள் தன்னிச்சையாகவே எல்லோரும் ஒன்றுதான், எல்லா மதமும் ஒன்றுதான்.. எல்லாரும் ஒன்றாக வாழ வேண்டும் என்பதுதான் கல்வித்துறையின் நோக்கம். ஆகவே, ஆதார் எண் இருக்கும். ரத்த வகை இருக்கும். ஆகவே இதை பயன்படுத்தி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கலாமா என்று பள்ளி கல்வித்துறை மற்றும் வருவாய்துறையுடன் இணைந்து எப்படி செயல்படுத்தலாம் என்று ஆய்வு செய்ய இருக்கிறோம்.